வாக்கு எண்ணிக்கையில் முறைகேடா? ஆதாரத்தை கோரிய இந்திய தேர்தல் ஆணையம்
Irregularity in vote counting The Election Commission of India sought evidence
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்ததையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக மீண்டும் வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிகவின் விஜயபிரபாகரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இந்திய தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி வி.பி.ஜெயசீலனிடம் விரிவான தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
,மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனை எதிர்த்து 2 முறை எம்பியாக இருந்த மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். நொடிக்கு நொடி திருப்பங்களை கொண்டிருந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பிரபாகரன் தாகூரிடம் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த வாக்கு எண்ணிக்கையில், ஏழாவது சுற்று வாக்கு எண்ணிக்கை வரை பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
அடுத்து நடந்த எட்டாவது சுற்றில் இந்த நிலை தலை கீழாக மாறியது, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை தாகூர் முந்தினார். தாகூர் மொத்தம் 3,85,256 வாக்குகள் பெற்றார்.
அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில், பிரபாகரனின் தாயும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டினார் மேலும் மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோரிக்கை விடுத்தார் .
கடந்த ஜூன் 4ஆம் தேதி விருதுநகர் தொகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நிறுத்தப்பட்டது. விருதுநகர் தொகுதியில் கடந்த ஜூன் 5-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்தது. ஆனாலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஸ்டாலின் எப்படி முடிவுகளை கணித்தார்?'' என்று பிரேமலதா கேள்வி எழுப்பினார். இதை பற்றிய விசாரணை தொடங்கி உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
Irregularity in vote counting The Election Commission of India sought evidence