மன்னிப்பு கேட்டது குற்றமா?  கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம் கொடுத்த வாலிபர்!  - Seithipunal
Seithipunal


கோவையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விபத்தின்போது மன்னிப்பு கேட்ட கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்ததால்  அவர் கைது செய்யப்பட்டார்.

கோவையை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்த  இளம்பெண் சம்பவத்தன்று தனது ஸ்கூட்டரில்  பாலக்காடு மெயின் ரோடு குனியமுத்தூர் அருகே சென்று கொண்டு இருந்தபோது அந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. அப்போது அந்த  குண்டும் குழியுமான சாலையில்  கல்லூரி மாணவியின் ஸ்கூட்டர் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதுத. இந்த விபத்தால்அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, ஸ்கூட்டரில் வந்த வாலிபரிடம் லேசாக சிரித்தபடி மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து உடனே அந்த வாலிபர், மோதலை மறந்து விட்டு, அந்த மாணவி தன்னிடம் சிரித்துதான் பேசுகிறார் என்று நினைத்து அவரை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது . மேலும் சிறிது தூரம் சென்றதும் மாணவியின் ஸ்கூட்டரின் முன்சென்று, தடுத்து நிறுத்தினார். அப்போது இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில், அந்த மாணவியின் கையை பிடித்து,அந்த வாலிபர்  கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி அலறினார். அலறல் சத்தம் கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இது குறித்து அந்த மாணவி, குனியமுத்தூர் போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு முத்தம் கொடுத்தது கோவைப்புதூர் சக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முகமது செரீப் என்பதும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் முகமது செரீப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவையில் நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு வாலிபர் முத்தம் கொடுத்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it a crime to apologize? Teenager kisses college student in the middle of the road


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->