விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளம் - இஸ்ரோ தலைவர்.! - Seithipunal
Seithipunal


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒரே நேரத்தில் இரண்டு புதிய ஏவுதளங்களை உருவாக்கி திறன்களை விரிவுபடுத்தவுள்ளது. அதிலும் குறிப்பாக, ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே இரண்டு ஏவுதளங்கள் உள்ளன.

தற்போது முப்பது டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு ஏவுதளங்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏவுதளங்கள்  இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பதுடன், திறன்களையும் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

isro leader v narayanan announce thoothukudi rocket launch site open soon


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->