தமிழகம் | 7வது மாடியிலிருந்து குதித்த ஐ.டி பெண் ஊழியர்! போலீசார் தீவிர விசாரணை!
IT female employee Sudden suicide Police investigating
ஈரோடு, கலியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகஸ்ரீ (வயது 25) இவர் கேளம்பாக்கம் அடுத்துள்ள சிறுசேரி சிப்காட் வளாகத்தில் தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று மாலை பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் இரவு 8.30 மணி அளவில் ஜெகஸ்ரீ 7 வது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த சக ஊழியர்கள் இது குறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
IT female employee Sudden suicide Police investigating