நடிகர் விஜயின் உறவினர் வீட்டில் வருமான வரி சோதனை.!! - Seithipunal
Seithipunal


சீனாவை தலைமையிடமாகக் கொண்டு ஓப்போ செல் போன் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனம், தற்போது 50 நாடுகளில் தன் நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என புகார் வந்தது. 

இதையடுத்து, சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாடு முழுவதும் அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள், அதற்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள் என அனைத்து இடங்களிலும் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்றுமதி-இறக்குமதி கையாளுவதல், அந்த பொருட்களை இடம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ ஈடுபட்டுவருகிறது. அதனடிப்படையில் அடையாறில் உள்ள கஸ்தூரிபாய் நகரிலுள்ள அவரது இல்லம், ஆதம்பாக்கத்தில் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது வீடு மற்றும் அலுவலர்கள் என 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

it raid for xavier britto home


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->