தீவிரமடைந்த வெல்லம் தயாரிப்பு பணிகள்: 13 ஆலைகளுக்கு பறந்த நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இங்கு தயாரிக்கப்படும் வெல்லங்களில் சர்க்கரை சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஜேடர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிப்பு ஆலைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

வெல்லம் பாகு தயாரிக்கும் இடம், பணியாளர்களின் சுத்தம், சர்க்கரை இருப்பு, வேதிப்பொருட்கள் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த ஆய்வில் சர்க்கரை மற்றும் வேதிப்பொருள் கொண்டு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரித்த 13 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். 

மேலும் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த 12 கிலோ சர்க்கரை, தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட நாட்டு சர்க்கரை, வெல்லம், வேதிப்பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. 

நோட்டீஸ் அனுப்பப்பட்ட 13 ஆடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்திருப்பதாவது, ஆலைகளில் பிளாஸ்டிக் மற்றும் துணி கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தக் கூடாது. 

வெல்லம் தயாரிக்க சர்க்கரை, வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை நிறம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இது போன்ற கலப்பட பொருட்கள் வைத்திருந்த ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaggery producing 13 factories notice issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->