புழல் சிறையில் திடீரென உயிரிழந்த கைதி.! மூச்சுத்திணறல் தான் காரணமா? - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


புழல் சிறையில் திடீரென உயிரிழந்த கைதி.! மூச்சுத்திணறல் தான் காரணமா? - போலீசார் விசாரணை.!

சென்னையில் உள்ள புழல் தண்டனை சிறையில் சுமார் தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில் இந்த சிறையில் காஞ்சீபுரம் மாவட்டம் மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு பாலியல் வழக்கில் கைதாகி, தண்டனை பெற்று அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணனுக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்த தகவலின் படி சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராதாகிருஷ்ணன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புழல் தலைமை காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, கைதி ராதாகிருஷ்ணன் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jail accuest died in chennai puzhal jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->