திருச்சியை உலுக்கிய ஜெய்லர் தற்கொலை.. வெளியான பகீர் தகவல்.. பின்னணியில் லால்குடி எஸ்.ஐ..!!
Jailer Raja suicide for he attacked in Lalgudi police station
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த மணி எங்களுடைய மூத்த மகன் ராஜா என்பவருக்கும் அவருடைய தம்பி நிர்மல் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இருதரப்பினரும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினரும் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்செழியன் முறையாக விசாரணை நடத்தாமல் ராஜாவின் தம்பி நிர்மலுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் லால்குடி காவல் நிலையத்தில் சிறை காவலர் மீது ராஜாவின் அவருடைய தம்பி நிர்மலின் மகள் தன்னை கைப்பிடித்து இழுத்ததாகவும் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் மீது லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்செழியன் முறையான விசாரணை நடத்தாமல் காவல் நிலையத்தில் சிறை காவலர் ராஜாவை அரை நிர்வாணத்தோடு அமர வைத்து, பூட்ஸ் காலால் உதைத்ததால் மன உலைச்சலில் இருந்ததாக உயிரிழந்த சிறை காவலர் ராஜாவின் மனைவி விஜயா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சிறை காவலர் ராஜா நேற்று லால்குடி காவல் நிலையம் முன்பு தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறை காவலர் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று காலை சிறை காவலர் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். லால்குடி காவல் நிலையத்தில் வைத்து எஸ்.ஐ பொற்செழியனால் சிறை காவலர் ராஜா அரை நிர்வாணம் படுத்தி தாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்செயலியனை பணியிட நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி காவல் ஆய்வாளர் பொற்செழியன் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையத்தில் சிறை காவலர் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Jailer Raja suicide for he attacked in Lalgudi police station