மே இரண்டாம் தேதி விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


ரம்ஜான் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் மே 2ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ரம்ஜான் பண்டிகை எனும் ஈகைத் திருநாள் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. ஏப்ரல் 30, மே1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளன. இடையில் மே 2 ஆம் தேதி திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.

அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவிக்க் வேண்டும். அவ்வாறு அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawahirullah demands holiday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->