கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் பற்றி அநாகரிக பேச்சு! சீமான் மன்னிப்பு கேட்டே ஆகணும்-ஜவாஹிருல்லா கொந்தளிப்பு! - Seithipunal
Seithipunal


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ''நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியுள்ளார். 

மேலும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கருதப்படுகிறது. 

முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும், தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தொடர்ந்து வாக்களிப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பே சாத்தானின் பிள்ளைகளாய் மாறிவிட்டார்கள் என்று சீமான் பேசியுள்ளார். 

இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது மற்றும் அருவருப்பானது. மேலும் அரசியல் ஒரு நேர்மையற்ற செயலுமாகும். 

இதற்காக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். முன்பு தாய் மதத்திற்கு திரும்புங்கள் என பேசியவர் சீமான். அவரது சிறுபான்மை தற்போதைய வெறுப்பு பரப்புரை மூலம் தன்னை வெளிப்படையாகவே அம்பலப்படுத்தி கொண்டுள்ளார். 

தமிழக மக்கள் இத்தகைய வேடதாரிகளிடம் எச்சரிகையாகவே இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawahirullah report Seeman should apologize


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->