தமிழக அரசுத் துறையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in tamilnadu pwd
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களை இஞ்சுக்கு காண்போம்.
காலி பணியிடங்கள் : பட்டதாரி அப்ரண்டிஸ் 500 காலிப்பணியிடங்களும், டெக்னீஷியன் அப்ரண்டிஸ் 160 காலிப்பணியிடங்களும், பட்டதாரி அப்ரண்டிஸ் 100 காலிப்பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி :
* பட்டதாரி அப்ரண்டிஸ் பணிக்கு சிவில்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது பி.ஆர்க் பிரிவில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.
* டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு கட்டிடக்கலை அல்லது சிவில்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* பட்டதாரி அப்ரண்டிஸ் BA, B.Sc, B.Com, BBA, BCA, BBA அல்லது ஏதேனும் பொறியியல் அல்லாத பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதி : 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:- பதவிகளை பொறுத்து சம்பளம் மாறுப்டம்.
தேர்வு முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 31, 2024 வரை TN PWD அப்ரண்டிஸ் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பச் செயல்முறை முற்றிலும் ஆன்லைனில் உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
English Summary
job vacancy in tamilnadu pwd