அதிகாரத்தால் மக்களை மிரட்டினால்! திமுக நிர்வாகிக்கு விழுந்த சவுக்கடி! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்துங்க! சுயநலத்துக்காக பிரச்சனை உருவாக்க பயன்படுத்த வேண்டாம்!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள அப்துல் அஜிஸ் தெருவில் வசித்து வரும் 64 வயதான கிரிஜா என்ற மூதாட்டியின் வீட்டில் திமுகவை சேர்ந்த வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வாடகை ஏதும் தராமல் குடியிருந்து வந்துள்ளார். 

அவரை வீட்டை விட்டு காலி செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூதாட்டி கிரிஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்ற நிலையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அவர் வீட்டை காலி செய்யாததால் கிரிஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் 48 மணி நேரத்திற்குள் காவல்துறையினரை அனுப்பி கிரிஜா அவர்களின் வீட்டிலிருந்து திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை வெளியேற்ற வேண்டும் எனவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் வீட்டை காலி செய்து விட்டதாகவும், வீடு தற்போது உரிமையாளர் கிரிஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஒப்புக்கொண்ட கிரிஜா தரப்பினர் வாடகை பாக்கி இன்னும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

இதனைக் கேட்ட நீதிபதி "அரசியல்வாதிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவர்கள் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தின் மூலம் மக்களை மிரட்டுவதை நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. 

அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக பிரச்சனைகளை உருவாக்க கூடாது. நில அபகரிப்பு என்பது தற்போது பகல் கொள்ளையாக மாறிவிட்டது. வாடகை பாக்கி வசூலிப்பதை பொருத்தவரை மாவட்ட ஆட்சியர் மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும்" என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். நீதிமன்றத்தின் இத்தகைய கருத்து திமுக தலைமைக்கும் அறிவுரை வழங்கும் வகையில் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge advice Do not use power for selfish interests in DMK cadre case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->