சிறுமிக்கு பாலியல் தொல்லை, சினிமா துணை நடிகர் மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சினிமா துணை நடிகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவர் சினிமா மற்றும் நாடகங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார்.  இவரது வீட்டிற்கு அதே பகுதியில் வசிக்கும் சினிமாத்துறையை சேர்ந்த தம்பதிகளின் 6 வயது மகள் இவரது வீட்டிற்கு விளையாட வந்துள்ளார்.  அப்போது அந்த சிறுமியை அவரின் வீட்டில் உள்ள அறைக்கு அழைத்து சென்ற அவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Junior artist arrested in POCSO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->