உள்துறை அமைச்சர் வந்து சென்ற மறுநாளே செந்தில் பாலாஜி கைது - சந்தேகத்தை ஏற்படுத்தும் கே.எஸ் அழகிரி.!! - Seithipunal
Seithipunal


உள்துறை அமைச்சர் வந்து சென்ற மறுநாளே செந்தில் பாலாஜி கைது - சந்தேகத்தை ஏற்படுத்தும் கே.எஸ் அழகிரி.!!

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மத்திய அமலாக்கத்துறையினரால் சோதனை நடத்தப்பட்டு வந்தது. 

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையுடன் நடத்தப்பட்ட இந்த விசாரணை அனைத்து இடங்களிலும் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுப்பெற்று வருகிறது. 

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, செந்தில்பாலாஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:-  "அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை; அவர் ஒரு அரசியல் தலைவர், அவர் எங்கும் ஓடிவிடவில்லை; 

அவரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?; அதுவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்ற மறுநாளே இது நடக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

k s azhagiri condems minister sendhil balaji arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->