திருவாரூரில் கட்டப்பட்டுள்ள "கலைஞர் கோட்டம்" நாளை திறப்பு.!! - Seithipunal
Seithipunal


திருவாரூரில் கட்டப்பட்டுள்ள "கலைஞர் கோட்டம்" நாளை திறப்பு.!!

தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான முத்துவேல் கருணாநிதியின் பிறந்தநாளை ஓராண்டு கொண்டாட திமுக திட்டமிட்டுள்ளது. இந்த ஓராண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கருணாநிதி புகழ் போற்றும் பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் நமது திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. 

அந்த வகையில், திருவாரூரில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழாவில் கலந்துகொள்ள தொண்டர்கள் அனைவரையும் அழைக்கும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "திருவாரூரில், உள்ள காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் "கலைஞர் கோட்டம்" உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை போலவே, திருவாரூரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேல் ஓடாமல் இருந்த திருவாரூர் ஆழித்தேரை நவீனத் தொழில்நுட்பத்துடன் ஓடச்செய்தவர் நம் தலைவர். அந்த திருவாரூரில், தேர் போன்ற வடிவில் அவருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாளை திருவாரூரில் திறக்கப்படவுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரண்டிட அனைவரையும் அழைக்கிறேன். இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்துவைக்கிறார். தலைவரின் சிலையை உங்களில் ஒருவனான நான் திறந்து வைக்கிறேன். 

ஒவ்வொரு தொண்டரின் உணர்வாகவும், உயிராகவும் உள்ள நம் தலைவரின் பெயரில் உயர்ந்து நிற்கும் இந்த கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழாவில் உங்கள் திருமுகம் காண காத்திருக்கிறேன். பகை வெல்லும் பட்டாளமாய் - அறம் காக்கும் அணிவகுப்பாய் திரண்டிடுவீர்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalaingar kottam open at tomarrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->