கலாஷேத்ரா பாலியல் வழக்கு புகார் அளிக்க சிறப்பு இணையதளம் வெளியீடு.!
Kalashethra issue complaints to special website
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகள் சிலர் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் ஹரிபத்மன் உள்ளிட்ட நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்தது. மேலும் பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடமிருந்து ரகசியமாக புகார் மனுக்களை பெற சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து கலாஷேத்ரா மாணவிகள் என்றஎன்ற https://reachoutsupport.co.in இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.
கலாஷேத்ரா நிர்வாகம் அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் புகார் அளிக்கும் மாணவிகளின் தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kalashethra issue complaints to special website