கலாஷேத்ரா விவகாரம்.. "ஒரே பேட்டியில் பெரிய சர்ச்சை".. சிக்கிய பிக்பாஸ் பிரபலம்..!! - Seithipunal
Seithipunal


கலாஷேத்ரா கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரியில் பணிபுரிந்து வந்த ஒரு பேராசிரியர் மற்றும் 3 உதவி பேராசிரியர்கள் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததால் கடந்த சில நாட்களாக மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் டிஜிபி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் நடிகை அபிராமி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது "என்ன பிரச்சனையோ, என்ன புகாரோ. அந்த விவகாரம் நடந்த போதே சொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு முதல் ஆளாக நான் குரல் கொடுத்து வருகிறேன். அந்தக் கல்லூரியில் நானும் படித்தேன். இதில் ஒரு சிலர் பேசுகிறார்கள்.

ஒரு பக்கத்து கதையை மட்டும் நாம் பார்க்கவே கூடாது.  இன்னொரு பக்கத்தையும் பார்க்க வேண்டும். நிறைய பேர் ஒரு பக்கத்து கதையை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை வருடமாக கிட்டத்தட்ட 89 வருடமாக அங்கு குற்றம் ஏதும் நடக்கவே இல்லை. நான் இப்போது அந்த கல்லூரியில் காலங்காலமாக குற்ற செயல் நடப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

கலாஷேத்ரா கல்லூரியை பற்றி தெரியாதவர்கள், அதன் பெயரைக் கூட சொல்லத் தெரியாதவர்கள் பேசி வருகின்றனர்.  என் மனதிற்கு வலியை கொடுக்கிறது. இந்த விவகாரத்தில் நீதியைப் பெற்று தருவதை விட கலாஷேத்ரா மீது புகார் வைக்கவே இவர்கள் பார்க்கிறார்கள். கல்லூரியின் பெயரை கெடுக்கவே இவர்கள் பார்க்கிறார்கள். 

இந்த கல்லூரியின் இயக்குனர் ரேவதி மேம் இப்போதுதான் அந்தப் பதவிக்கு வந்தார். ஆனால் 10 வருடமாக குற்றம் நடப்பதாக கூறுகிறார்கள். இவ்வாறு இருக்கும் பொழுது ரேவதி மேம் மீது எவ்வாறு புகார் வைக்க கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பேச வாய்ப்பை அளிக்கப்படவில்லை. அவர்களின் குடும்பத்தை பற்றி யாரும் யோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் கலாஷேத்ராவுக்கு எதிராக பேசுவது மிக மிக தவறான விஷயம் என நடிகை அபிராமி பேசியுள்ளார்.

அவரின் இத்தகைய பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் அந்த கல்லூரியில் படித்தார் என்பதற்காக பேராசிரியர்களுக்கு ஆதரவாக பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

தனக்கு பாலியல் தொந்தரவு நடக்கவில்லை என்றால் மற்ற பெண்களுக்கு நடந்திருக்காது என்ற அர்த்தத்தில் அபிராமி பேசுவதாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தும் அந்தக் கல்லூரியின் இயக்குனர் ரேவதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் பிரபலம் அபிராமி பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களுக்கு வரிந்து கட்டி பேசியதற்கு சமூக ஆர்வலர்களும் இணையதள வாசிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalashetra issue controversy over Bigg Boss celebrity Abrami comments


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->