கலாஷேத்ரா விவகாரம்.. மாணவிகள் ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை.!
Kalashetra sexual complaint issue State Human Rights Investigation Committee enquiry to students today
கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பேசும் பொருளானது.
ருக்மணி தேவி கலை கல்லூரியில் கடந்த 2019ஆம் ஆண்டு படித்து வந்த முன்னாள் மாணவி ஒருவர் நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற்து.
இந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமை ஆணைய விசாரணைக்குழு இன்று விசாரணை நடத்தியது. பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய 4 அதிகாரிகள் நேற்று கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று பாலியல் புகார் குறித்து கலாஷேத்ரா மாணவிகள், ஆசிரியர்களிடம் மாநில மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணை நடத்துகிறது. தேர்வு முடிந்து 2 மாதங்களுக்கு பிறகே மாணவிகள் கல்லூரிக்கு திரும்புவர் என்பதால் இன்றே விசாரணை நடத்தப்படுகிறது.
English Summary
Kalashetra sexual complaint issue State Human Rights Investigation Committee enquiry to students today