சிகிச்சைக்கு பயந்து ஓடிய நபர் பலி! மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே.... கதறி துடிக்கும் உறவினர்கள்!
Kallakurchi kallasarayam case onem more death
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 55-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் தப்பி ஓடினார். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலர் தப்பி ஓடியதாகவும், அவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சுப்பிரமணியம் என்ற அந்த நபர், இன்று கடுமையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
ஆனால் அழைத்து வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய சுப்ரமணியன் உறவினர்கள் தெரிவிக்கையில் ,அவரின் உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் படித்த தகவலின் படி, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைக்கு வராமல் வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து பேரின் உடல்நிலை முன்னேறி உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், கள்ளச்சாராய புழக்கம் இருந்த இருபது இடங்களில் மருத்துவக் குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், விஷ சாரயத்தால் உயிரிழந்த 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
English Summary
Kallakurchi kallasarayam case onem more death