350 லிட்டர்! வேணாம்டா, இது ஆபத்து! ராமர் எச்சரித்தும் கன்னுகுட்டி செய்த கொடூரம்!
Kallakurchi kallasarayam Ramar Kannukutty some police info
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடம் போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தற்போது வெளியாகியுள்ள சில தகவல்கள் கள்ளச்சாராய வியாபாரிகளின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. வெளியான தகவலின்படி,
மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து சாராயம் என்று கூறி கன்னுக்குட்டி விற்பனை செய்ததாகவும், மாதேஷ் ஆன்லைன் முலம் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து, ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் தின்னர் என்ற பெயரில் மெத்தனாலை வாங்கியதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், சென்னை மாதவரம் ரவுண்டானா அருகேயுள்ள தொழிற்சாலையில் இருந்தும் மாதேஷ் மெத்தனால் வாங்கியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாதேஷிடம் மெத்தனாலை வாங்கிய சின்னதுரை, அதில் 1 லிட்டருக்கு 1 லிட்டர் என்ற சம பங்க்கில் தண்ணீரை கலந்து விற்றுள்ளார்.
சின்னதுரையிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதில் மேலும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்பனை கன்னுக்குட்டி விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில், சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக எச்சரித்தும், வாங்கிய 330 லிட்டர் விஷச் சாராயத்தில் 250 லிட்டர் வரை கன்னுக்குட்டி விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதில், வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த விஷ சாராயத்தை சாராய வியாபாரி ராமரின் தந்தை தான் முதலில் குடித்து, உயிருக்கு போராடி உள்ளார். இதனை பார்த்ததும் தன்னிடமிருந்த மெத்தனால் சாராயத்தை அழித்த ராமர், சக வியாபாரிகளான கன்னுக்குட்டி உள்ளிட்டவர்களை எச்சரித்துள்ளார்.
கன்னுக்குட்டி தவிர மற்ற அனைவரும் தாங்கள் வைத்திருந்த விஷச் சாராயத்தை கீழே கொட்டி விட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Kallakurchi kallasarayam Ramar Kannukutty some police info