#கள்ளக்குறிச்சி | அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பணம் பறிக்கும் ஊழியர்கள் - மக்கள் புகார்! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பொது மக்களிடம் பிரசவ வார்டில் பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் இயங்கி வந்த மாவட்ட அரசு மருத்துவமனை,  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டு அனைத்து விதமான சிகிச்சைகளும் அங்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையடுத்து பெண்களுக்கான பிரசவம் மற்றும் குழந்தைகள் நலன் சிகிச்சை மட்டும் பழைய மாவட்ட மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில்  பிரசவத்திற்காக வரும் பெண்களின் உறவினர்களிடம் மருத்துவமனையின் வேலை ஆட்கள் பணம் வாங்குவதாகவும் , இல்லை என்று மறுப்பு தெரிவித்தால் தரக்குறைவாக பேசுவதாகவும் பொது மக்கள்  குற்றம் சாட்டுகின்றனர்

.

சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் படுப்பதற்கு போதுமான படுக்கைகள் இல்லாததால் தரையில் படுக்கின்றனர். குடிநீர் குழாயில் தண்ணீர் சரியாக வரவில்லை என்றும் பொதுமக்கள் சார்பில் குற்றம் எழுந்துள்ளது.

மருத்துவமனையின் குடிநீர் குழாய், கழிவறை குழாய் குறித்து வேலை செய்யும் நிர்வாக ஊழியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என நோயாளிகளும் பொதுமக்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Govt Hospital issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->