இது நம்ம லிஸ்டலேயே இல்லையே! கட்டம் கட்டப்படும் திமுக! காய் நகர்த்தும் டெல்லி மேலிடம்! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 140-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசின் அலட்சியம் தான் காரணம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரிக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆளும் திமுக அரசை எந்த விமர்சனமும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும், விமர்சனமும் எழுந்துள்ளது. 

இதேபோல், தமிழகத்தில் நடந்துள்ள இந்த கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி இதுவரை எந்த ஒரு விமர்சனம் அல்லது கருத்துக்களை தெரிவிக்கவில்லை. ஏன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கேவுக்கு மத்திய அமைச்சர், முன்னாள் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நெட்டா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 

அந்த கடிதத்தில், திமுகவிற்கும், இந்தியா கூட்டணிக்கும், சட்டவிரோத சாராய மாஃபியாவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திருந்தால், கள்ளச்சாராயத்தால் பலியான உயிர்களை நாம் காப்பாற்றி இருக்கலாம். 

வறுமை மற்றும் பாகுபாடுகளை சந்தித்து வரும் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், அவர்களுக்கு நிகழ்ந்த பேரழிவு குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை அமைதி காத்துக் கொண்டிருக்கிறது. 

இந்த விவகாரத்தில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கவும், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் திமுக அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மேலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். அல்லது அவர்களுக்காக குரல் எழுப்ப வேண்டும்" என்று ஜே பி நட்டா தனது கடிதத்தின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் விவகாரத்தில் நாடுமுழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், இதன் பின்னணியில் திமுக தான் உள்ளதாகவும், இதற்க்கு பதிலடி கொடுக்கவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையிலெடுத்துள்ள டெல்லி பாஜக தலைமை, ஹிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க, காங்கிரஸ் மூலம் காய் நகர்த்தி வருவதாகவே ஜெபி நட்டாவின் கடிதத்தை பார்க்க முடிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Hooch Tragedy JP Natta Kharge Congress BJP DMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->