தமிழகத்தை புரட்டி போட்ட சம்பவம்! மேலும் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், மேலும் நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. 

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தற்போது வரை 22 பேரை சிபிசிஐ போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் புள்ளிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 22 பேர்களில், 17 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

இதனை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாதேஷ், சிவக்குமார், ஜோசப், ஏழுமலை ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. 

இந்த நிலையில், மேலும் நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பயந்துள்ளது. அதன்படி, சாகுல் ஹமீது, பென்சிலால், கதிரவன், சின்னத்துரை ஆகிய நன்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
 
மீதமுள்ள ஒன்பது நபர்கள் மீது விரைவில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi kallasarayam case Gundas


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->