திடீர் திருப்பம்: அது கெட்டுப்போன மெத்தனால்! குடித்துப் பார்த்தும் விற்பனை செய்ய துணிந்த கொடூரன்!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சிகள் கள்ளச்சாராயம் குடித்து பலியானாரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

தற்போது வரை கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 52 பேரின் மரணத்திற்கு காரணமான விஷச் சாராயத்தை விற்பனை செய்த, தயாரித்த மற்றும் மூலப்பொருளான மெத்தனால் கொண்டு வந்த வந்தவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், தாமோதரன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மெத்தனால் சப்ளை செய்த விவகாரத்தில் மாதேஷ், சின்னதுறை அவரின் நண்பர்கள் மதன் குமார், ஜோசப் ராஜா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போலீசார் விசாரணையில் ஒரு சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் எப்போது கள்ளச்சாராயம் வாங்க சென்றாலும் அவரின் சகோதரர் தாமோதரன் தான் சிறிதளவு கள்ளச்சாராயத்தை குடித்துவிட்டு வாங்குவது வழக்கமாம். 

இந்த மெத்தனால் கலந்த சாராயத்தை விற்பனை செய்வதற்கு முன்பு தாமோதரன் குடித்து பார்த்துள்ளார். அப்போது அது கெட்டுப் போய்விட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கு உயர்தர சரக்கு என்று கூறி விற்பனை செய்யுங்கள் என்று சின்னகுட்டி மட்டும் தாமோதரன் இடம் சின்னத்திரை விற்பனை செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi kallasarayam case some info leaked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->