கள்ளக்குறிச்சி கலவரம் மேலும் 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கலரவம் தொடர்பாக மேலும் 4 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக 350-க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சர்புதீன், சரண்ராஜ், லட்சாதிபதி, மணி ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாணவர்கள் சான்றிதழ், வாகனங்களை எரித்து முக்கிய குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

மேலும், பள்ளியில் இருந்த சான்றிதழ்கள், பேருந்து, போலீஸ் வாகனத்தை தீயிட்டு எரித்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi protest 4 more people have been charged under the kundas Act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->