கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவி தற்கொலை.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகே அமைந்துள்ள கோவிந்தசாமிபுரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகிலிருந்த அலமேலு என்ற பெண்மணியின் வீட்டிற்கு உறவுக்கார இளைஞரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். 

அப்போது 12-ஆம் வகுப்பு மாணவியுடன் விஜய்க்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அத்தை அலமேலு தெரியவந்த நிலையில் விஜய் ஊருக்கு சென்ற நேரம் பார்த்து மாணவியின் வீட்டிற்கு சென்று அவரிடம் தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi student suicide for Love Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->