கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கில் சாகுல் ஹமீதை கைது செய்த சிபிசிஐடி போலீசார்!
Kallakurichu Kallasarayam case one more arrest CBCID
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த சாகுல் ஹமீது என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானாரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அடுத்தடுத்து வெளியாகும் செய்திகளும், தகவல்களும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது வரை கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் 52 பேரின் மரணத்திற்கு காரணமான விஷச் சாராயத்தை விற்பனை செய்த, தயாரித்த மற்றும் மூலப்பொருளான மெத்தனால் கொண்டு வந்தவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்ற கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரின் மனைவி விஜயா, தாமோதரன், மெத்தனால் சப்ளை செய்த விவகாரத்தில் மாதேஷ், சின்னதுரை அவரின் நண்பர்கள் மதன் குமார், ஜோசப் ராஜா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்த சாகுல் ஹமீது என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இதுவரை 8 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kallakurichu Kallasarayam case one more arrest CBCID