கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் || பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கடந்த 19-ந் தேதி 17 பேரும், 20-ந் தேதி 24 பேரும், 21-ந் தேதி 9 பேரும், நேற்று முன்தினம் ஐந்து பேரும் என்று மொத்தம் 55 போ் உயிாிழந்தனா்.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சோ்ந்த சவுந்தரராஜன் மகன் மதன் என்பவா் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இவரைத் தொடர்ந்து மாலையில் சேஷசமுத்திரத்தை சேர்ந்த சாமுண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதையடுத்து இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவங்கூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒரு பெண் இறந்து போனதால், கள்ளச்சாராய பலி 59 ஆக இருந்தது.

இதற்கு முன்னதாக மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன், இளையராஜா ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 61 ஆக உயா்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallasarayam death troll increase 61 in kallakurichi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->