கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு நல்ல செய்தி - சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 65க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாரத்தை ஒழிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளச்சாராயம் காய்ச்சக்கூடிய முக்கிய பகுதியான கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி வேட்டையை தொடங்கியுள்ளனர். 

அதே சமயத்தில் கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மக்கள் வருமானத்திற்கு வழியில்லாமல் தான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையே, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக பொருளாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று கல்வராயன் மலைப்பகுதிக்கு பேருந்து வசதிகளை அடுத்த 4 வாரங்களில் செய்து கொடுக்க தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வழக்கு விசாரணையின்போது, சேலம், விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்கள் காணொளி மூலம் நேரில் ஆஜராகி உயர்நீதிமன்றத்தில் இந்த விளக்கத்தை அளித்தனர்.

அதில், கல்வராயன் மலைப்பகுதியில் இரண்டு மினி பேருந்துகளும், 10 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சேலம், விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்கள் பதில் அளித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalvarayan Hills side people issue Chennai HC Order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->