நெருங்கும் மக்களவை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, 

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வருகின்ற 23ஆம் தேதி காலை 11:30 மணியளவில் அவசர நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த செயற்கை குழு மற்றும் அவசர நிர்வாக கூட்டத்தில் அனைத்து நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் முடிவில் இருக்கிறார். இது தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan People Justice Center meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->