அதிமுக கொடி அகற்றம்! ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுக வைத்த ஆப்பு! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வைத்த அதிமுக கொடி மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது.

ஓ பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாகவும் கூறி, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 

யோதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகளும் அவருக்கு கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதும் உறுதியாகிவருகிறது.

இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் அதிமுக கொடி மற்றும் அதிமுக பெயரை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்காக, காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் அதிமுக கொடிகளை அகற்ற வேண்டும் என்று, காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரை தொடர்ந்து, ஓ பன்னீர்செல்வத்தின் புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanjipuram ADMK Flag Used for OPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->