#தமிழகம் |10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவிக்கு, பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டிபுரம் அடுத்த அருமனை அப்பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த வேலவன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், மணலிகரை பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பொதுத்தேர்வு ஆசிரியராக வேலவன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் பணியில் இருக்கும் போது தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரிடம் அத்து மீறி பாலியல் செய்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தேர்வு முடிந்த பிறகு இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து ஆசிரியர் வேலவனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanniyakumari arumani teacher arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->