ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி செய்த செயல்! கதிகலங்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமாரி, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நாட்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மற்ற நாட்களிலும் பொதுமக்கள் மனு அளிக்க செல்கின்றனர். அவ்வாறு மனு அளிக்க வருபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியினர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். 

அவர்கள், தங்களது சொத்துக்களை மகன்கள் எழுதி வாங்கிவிட்டதாகவும் அதன் பிறகு தங்களை பராமரிக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர். 

இதனால் எங்களது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வயதான தம்பதியினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 

வயதான தம்பதியினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanyakumari elderly couple rolled ground collectors office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->