'எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை; தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது; மஹாராஷ்டிரா ஆளுநர் சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து வாழ் இந்தியரான சச்சின் நந்தா எழுதிய 'ஹெட்கேவர் (ஆர்.எஸ்.எஸ்.நிறுவனர்) - வாழ்க்கை வரலாறு' என்ற புத்தக வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்றது. இதில் மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு குறித்து கூறிய விடயம் சர்ச்சையாகியுள்ளது.

ராஜ்பவனில் அவர் உரையாற்றுகையில்; ''இந்தியா கடந்த காலத்தில் ஒருபோதும் ஒரே மாதிரியான நாடாக இருந்ததில்லை என்று கூறுவதை தான் எதிர்ப்பதாகவும், பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்ததந்ததாகவும், இந்தியா கலாசார ரீதியாகவும் பாரம்பரியமாகவும், எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது என கூறிய அவர், சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும் விட தற்போது மிகவும் பொருத்தமானவையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,  ஆர்.எஸ்.எஸ் தனது நீண்ட மற்றும் புகழ்பெற்ற பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியுள்ளதாகவும், அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். இதே நேரத்தில், தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது, சமண மதம் தோன்றிய போது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர் என்றும், இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்று மஹாராஷ்டிரா ஆளுநர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Not Tamilans created Tamil Nadu Tamil Nadu was created by the British Maharashtra Governor controversial speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->