காரைக்கால் | மைனர் பெண்ணை காதலித்த வாலிபருக்கு தர்ம அடி! போலீசார் வழக்கு பதிவு!
Karaikal minor girl love case
காரைக்கால், திருவள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் அரவிந்தராஜ் (வயது 28) இவர் பெயிண்டர் வேலை செய்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.
அந்த பெண் மைனர் என்பதால் பெண்ணுடன் பழகுவதை நிறுத்தி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தராஜ் அவரது நண்பர்களுடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற 4 பேர் அரவிந்தராஜை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளனர். இதனால் அரவிந்தராஜ் அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு செல்ல முயற்சித்த போது அங்கு தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கிவிட்டு 4 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
இதனால் அரவிந்தராஜ் மற்றும் அவரது தாய் இருவரும் படுகாயம் அடைந்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் தொடர்பாக காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Karaikal minor girl love case