தமிழக அரசு பள்ளியில் பட்டியலின பெண் சமைப்பதால், பெற்றோர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு? நடந்தது என்ன?
Kariyankarayanpalaiyam TNGovt School issue
திருப்பூர், பெருமாநல்லூர் அருகே அரசு பள்ளியில் பட்டியலின பெண் சமைப்பதால், பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் (TC) கேட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெருமாநல்லூர் அடுத்த காரிங்கராயன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 44 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியுள்ளது.
காரிங்கராயன்பாளையம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த தீபா என்பவர் இந்த காலை உணவை சமைத்து, பள்ளி மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார்.
இதனை பார்த்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சில பெற்றோர் தங்களது குழந்தைகளை சாப்பிடாமல் அழைத்துச் சென்றனர்.
மேலும், வேறு பள்ளியில் தங்களது குழந்தைங்களை சேர்ப்பதற்காக பெற்றோர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை, ஊராட்சி தலைவர் முருகேசனை தவிர, பள்ளி தரப்போ, மாவட்ட ஆட்சியரோ இப்படியான சம்பவம் ஏதும் நடைபெறுவதில்லை என்பது போன்ற பதிலை கொடுத்துள்ளதாக தெரிவியவந்துள்ளது.
English Summary
Kariyankarayanpalaiyam TNGovt School issue