மேகதாது விவகாரம் || அதிரடி காட்டும் கர்நாடகா.. மௌனம் காக்கும் மு.க ஸ்டாலின்! கொந்தளிப்பில் தமிழகம்!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில அரசு மேகதாது அணை அமைய உள்ள வனப்பகுதியில் ஆய்வுக்காக 29 வனத்துறை அதிகாரிகளை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்காக காவேரி ஒட்டியுள்ள சுமார் 12,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளன. 

இதற்கான வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலுக்காக தற்பொழுது கர்நாடக மாநில அரசு காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேகதாது அணை வரைவு அறிக்கைக்கான ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில்மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதற்கு தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்பொழுது 29 வனத்துறை அதிகாரிகளை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட வரைவு அறிக்கையின் படி மத்திய அரசு கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில் எவ்வாறு சரி செய்வது என ஆராய்வதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேகதாது அணை அமையவுள்ள வனப்பகுதியில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை, வனவிலங்குகளின் வாழ்விடம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை கணக்கிடுவதற்காக 29 வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் தற்போது வரை கிடைக்காததால் மாற்று வழியை கண்டறிய கர்நாடகா அரசு தயாராகி வருகிறது. பெங்களூரு, சாம்ராஜ்நகர், மைசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போதெல்லாம் மேகதாது விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் மேகதாது விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் தற்பொழுது கர்நாடகாவில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுமான பணிகளை துவங்க தீவிரம் காட்டி வருகிறது.

தமிழகத்தின் ஒப்புதலோடு அணைகட்டியே தீருவோம் என கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே சிவகுமார் தெரிவித்திருந்த நிலையில் மறைமுகமாக அணை கட்டுவதற்கான பணிகளை துவங்கி இருப்பது தமிழக மக்களையும் விவசாயிகளையும் கொந்தளிக்க செய்துள்ளது. மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மௌனம் காத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் கர்நாடகா அரசின் இத்தகைய நடவடிக்கை அரசியல் ரீதியில் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka govt appointed 29 forest officials to build Meghadatu Dam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->