கருணாநிதிக்கு தங்க சிலை - விடுதலை பறவைகள் கட்சி நிறுவன தலைவர் அறிவிப்பு!
karunanidhi golden statue
காஞ்சிபுரம் மாவட்டம், பெங்களூரு சாலை அருகே உள்ள விடுதலைப் பறவைகள் கட்சி அலுவலகம் அருகில் சமூக நல அறக்கட்டளைச் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு தங்கத்தில் சிலை அமைக்கப்படுவதாக விடுதலைப் பறவைகள் கட்சி நிறுவனத் தலைவர் டெல்லி ராஜா தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்த மாதம் 29ஆம் தேதி கால் கோள் விழா நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் விடுதலைப் பறவைகள் கட்சி சார்பில் தங்க சிலை அமைக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் தங்கச் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்து பிரதமர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து திறந்து வைப்பார்கள் என்றும் விடுதலைப் பறவைகள் கட்சி நிறுவனத் தலைவர் டெல்லி ராஜா தெரிவித்துள்ளார்.
English Summary
karunanidhi golden statue