#திருவண்ணாமலை || கருணாநிதி அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தால் பதற்றம்! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் காலை மற்றும் பிற்பகல் என 2 பிரிவுகளாக சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல வகுப்புகள் துவங்கிய நிலையில் அரசு கலை கல்லூரியில் 90 ரூபாயாக இருந்த இளநிலை தேர்வு கட்டணம் 110 ரூபாயாகவும், முதுநிலை தேர்வு கட்டணம் 450 ரூபாயிலிருந்து 540 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதற்கும், மாணவர்களுக்கு மதிப்பெண் போடுவதில் மிகப்பெரிய அளவுக்கு குளறுபடி நடப்பதாகவும் கல்லூரியின் வாயிலின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரே சமயத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுயது. தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வேண்டும் எனவும், அதேபோன்று விடைத்தாள் திருத்துவதில் மதிப்பெண்கள் குறைத்து வழங்குவதை கண்டித்தும் மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாரை கண்டித்தும் மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanidhi govt college students protest in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->