பேனா நினைவு சின்னம் : தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய மத்திய அரசு..!
karunanithi memorial pen statue central government letter
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தமிழ் இலக்கிய பணிகளை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. இந்த பிரம்மாண்ட நினைவுச் சின்னத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொண்டு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் ஒன்று எழுதி இருந்த நிலையில், சென்னை மெரினாவில் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, தமிழக அரசின் விண்ணப்பத்தை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து மற்றும் மீனவ சமுதாய மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த அறிக்கையை விரிவாக 4 ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அனைத்து அனுமதிகளையும் பெற்று கட்டுமான பணியை தொடங்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
English Summary
karunanithi memorial pen statue central government letter