இது இல்லை எனில் இனி மது, பெட்ரோல், ரேஷன் விற்பனை இல்லை - மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த சேவையும் வழங்கப்படாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவது குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில், வரும் 18-ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் போன்ற இடத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மார்க் கடைகளிலும் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur helmet must order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->