நெஞ்சை பதற வைத்த சம்பவம்: மனைவியை பார்க்க சென்ற கணவருக்கு நேர்ந்த விபரீதம்!  - Seithipunal
Seithipunal


கரூர், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் பிரபாத் (வயது 37) இவர் விவசாயி. இவரது மனைவி பவானியில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்தார். 

இதனால் பிரபாத் அவரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கரூரில் இருந்து திருச்செங்கோடு வழியாக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பிரிவு சாலை பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பிரபாத் ஓட்டி சென்ற இருசக்கர வாகனம் முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

இதில் அவருக்கு தலையில் படுகாயம் அடைந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக பிரபாத்தை மீட்டு அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur teenager went to see wife an accident died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->