கரூர் தெய்வநாயகி வழக்கு! கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் - தீர்ப்பை உறுதிசெய்த உயர்நீதிமன்ற கிளை!கிளை! - Seithipunal
Seithipunal


நம் நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கரூர் மாவட்டம், தோகமலை காவல் நிலையத்தின் சார்பு ஆய்வலாக பணிபுரிந்த சக்திவேல் மற்றும் அவரின் மனைவி தெய்வநாயகி மீது, 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். 

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே சக்திவேல் உயிரிழந்தார். 

இதனை அடுத்து இந்த வழக்கில் தெய்வநாயகிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து தெய்வநாயகி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கேகே ராமகிருஷ்ணன், நம் நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஊழல் பரவி உள்ளது. இந்த ஊழல் வீடுகளில் இருந்து தான் தொடங்குகிறது. வீட்டில் உள்ளவர்கள் ஊழலை தடுக்கவில்லை எனில், இந்த ஊழலுக்கு முடிவு கட்ட முடியாது.

இதனால் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை உங்கள் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனவே ஒரு அரசு பொது ஊழியரின் மனைவியான மனுதாரர், கணவர் லஞ்சம் வாங்குவதை தடுத்து இருக்க வேண்டும். அப்படி தவறான முறையில் பெற்ற அந்த பணத்தில் மனுதாரர் வாழ்ந்துள்ளதால், அதற்கான தண்டனையை அவர் அனுபவித்து தான் ஆக வேண்டும். 

உடனடியாக மனுதாரரை சிறையில் அடைக்கவும், அவர் சட்ட விரோதமாக வாங்கிய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் விசாரணை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur Theivanayagi case judgement


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->