ஓட்டு போடுறது முக்கியமில்ல! செல்லாத ஓட்டா போடக்கூடாது! உற்று உற்று பார்த்த கார்த்திக் சிதம்பரம்! - Seithipunal
Seithipunal


ஓட்டு போட்ட மை காய்ந்ததா என சோதித்த கார்த்திக் சிதம்பரம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேரு குடும்பத்தை சேராத நபர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜனநாயக முறைப்படி வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டியில் நிலவு வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் இந்த தேர்தலில் பங்கு கொண்டு வாக்களித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் வாக்களித்தனர். தமிழகத்தில் உள்ள 211 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி நிதி அமைச்சரமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் வாக்களித்தார். கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி தலைவராக போட்டியிடும் கேரளாவைச் சேர்ந்த சசி தரூரின் ஆதரவாளராவார். இவர் சசி தரூருக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். 

இன்று தனது வாக்கு செலுத்தும் போது எடுத்த புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் "வாக்குச்சீட்டை பெட்டியில் போடுவதற்கு முன்பு வாக்களித்த மை காய்ந்து விட்டதா என சோதித்துள்ளேன்" என கருத்திட்டு அதற்கான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kathick Chidambaram Making sure the ink dries before drop the ballot paper


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->