கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் அறிவிப்பு! 22 பேரின் நிலை என்ன?  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 346 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 250 க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று கேரள மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை தூறல்மலை உள்ளிட்ட கிராமங்களில் வீடுகள் அப்படியே மண்ணில் புதைந்து, பல குடும்பங்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுயள்ளன. அவர்களை தேடும் பனி இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலை நிமித்தமாக தற்காலிகமாக வயநாட்டில் வசித்து வந்த தமிழர்கள் 3 பேர் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வயநாட்டில் நிரந்தரமாக குடியேறிய தமிழர்கள் 22 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காக சென்றவர்களில் ஒருவரும், குடியேறியவர்களில் 129 பேரும் என மொத்தம் 130 தமிழர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Wayanad Landslide Tamil people info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->