கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு!
Kovai car explosion incident 5 layer security for Chennai airport
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஒருவர் பலியானார். கோவையில் வெடித்து சிதறிய கார் பொள்ளாச்சி பதிவு எண் கொண்டது என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் நான்கு பேரிடம் கை மாறி இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும் தடயவியல் நிபுணர்கள் கடந்த 11 மணி நேரமாக கார் வெடித்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சென்னையிலிருந்து விமான மூலம் கோவைக்கு விரைந்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர் ஆய்வினை மேற்கொண்டார். இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியானது கோவை மாவட்டம் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது தற்பொழுது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் மீது ஏற்கனவே சந்தேகத்தின் பெயரில் 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுவரை மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஐந்து அடுக்கு பாதுகாப்பிற்கு போலீசார் பணியமத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை கண்காணித்து சோதனைக்கு உட்பட்டப்படுகிறது. வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையம், பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Kovai car explosion incident 5 layer security for Chennai airport