கோவை: துணி கூட துவைக்க போயிடாதீங்க மக்களே! ஆர்ப்பரித்து வருது... கவனம்! - Seithipunal
Seithipunal


கோவை: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நொய்யல் ஆறு மற்றும் தடுப்பணைகளில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்றும், கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், கோவை சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், சித்திரைசாவடி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணையில் இருந்து நாளை முதல் 105 நாட்களுக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கோட்டை வட்டம், மேக்கரை கிராமத்தில் உள்ள அடவிநயினார் நீர்த்தேக்கத்தின் தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினை பொறுத்து அடவிநயினார் கோவில் நீர்த்தேக்க பாசனம் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளாங்காடுகால், கம்பிளிகால், புங்கன்கால் மற்றும் சாம்பவர்வடகரை கால்வாய் ஆகியவற்றின் நேரடி பாசனம் நிலங்களுக்கு 1434-ம் பசலி கார் பருவ சாகுபடி செய்வதற்கு அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 19.07.2024 முதல் 31.10.2024 முடிய 105 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் பாசன பருவகாலத்தின் மொத்த தேவை தண்ணீர் அளவான 268.43 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. 

இதனால் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டம் மற்றும் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள வடகரை கீழ்பிடாகை, வடகரை மேல்பிடாகை, பண்பொழி, இலத்தூர், குத்துக்கல் வலசை, கொடிக்குறிச்சி, அச்சன்புதூர், நெடுவயல், நயினாகரம், கிளாங்காடு. ஆய்க்குடி மற்றும் சாம்பவர் வடகரையில் 2147.47 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Chithirai Chavadi Flood River Fishing


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->