பிரபல தமிழ் யூடியூபர் மாடர்ன் மாமி சிக்கயது எப்படி?! 40 லட்ச ரூபாய்க்கு மேல் பண மோசடி!  - Seithipunal
Seithipunal


யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் மூலதன தொகையும் கூடுதலாக பணமும் திருப்பித்தரப்படும் என்று கூறி விளம்பரம் செய்து பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த பிரபல தமிழ் யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பரின் மனைவ ஹேமலதா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 'மாடர்ன் மாமி' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். 

இந்த யூடியூப் சேனலில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை மக்களுக்குக் கூறி வந்துள்ளார். இந்த யூடியூப் சேனிலில் ஒன்றரை லட்சத்திற்கு மேல் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்துள்ளனர். 

இந்நிலையில், தங்களின் யூடியூப் சேனலில் 1200  ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் மூதலதன தொகையுடன் 1500 ஆக திருப்பித் தரப்போவதாக அறிவித்துள்ளார். 

இதனை பார்த்து பலரும் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர். பலரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பாமல் ஏமாற்றியுள்ளனர். 

இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு காவால்துறையின் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், இது குறித்து விசாரித்த போது, அந்த தம்பதி 44 பேரிடம் 41 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். 

இதையடுத்து, இந்த தம்பதியரை கைது செய்த போலீஸார்,  அவர்களிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ஒரு இரு சக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த யூடியூப் தம்பதி 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Modern mami Hemaladha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->