ஜமேஷா முபின் உறவிரை கைது செய்தது தனிப்படை! - Seithipunal
Seithipunal


கடந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ஜமேஷா உபின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரி குறிப்பிலிருந்து கோவையில் உள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவது குறித்தான குறிப்புகளை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். 

மேலும் கோவை மாநகர காவல் துறையினர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர். இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), மற்றும் ஜி.எம் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்களை காவல் எடுத்து விசாரிக்க கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே எம் 5 நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கைதான ஐந்து பேரையும் மூன்று நாட்கள் போலீஸ்காரர்கள் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். 

இந்த நிலையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஆறாவது நபராக அப்சல்கான் என்பவரை தனிப்படை போலீசார் தயவுசெய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஜமேஷா முபின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai police arrested 6th person of car blast incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->