கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கிஷோர் கே சாமியிடம் விசாரணை! - Seithipunal
Seithipunal


கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அமைதியை குறைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே சாமியிடம் சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் விசாரிக்க நான்காவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவண பாபு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கிஷோர் கே சாமி நீதிமன்றத்தில் ஆசைபடுத்தப்பட்டார். 

சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் விசாரணை நடத்த மனு தாக்கல் செய்யப்பட்டது. கிஷோர் கே சாமியிடம் ஆறு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த நீதிபதி சரண பாபு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முழு உடல் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற விசாரணை தொடங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai police interrogated KishoreKSami in the car blast incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->